LATEST ARTICLES

0

நான் வான் காந்த அலையில் கலந்துள்ளேன் உங்களுக்கு தவத்தில் எந்த இடர் ஏற்பட்டாலும் என்னை நினைத்துக்கொள்ளுங்கள் நினைக்கும்போது நான் உங்களோடு கலந்து விடுவேன் என் கையை பிடித்துக்கொண்டே நீங்கள் தவத்தில் உயரலாம். உங்களுக்கு வரும் எந்த இடரையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆன்மீகத்தில் குரு காணிக்கை என்பது ஒன்று உண்டு. அதை நான் உங்களிடம் வேண்டுகிறேன். உங்களுடைய சினத்தை, பொறாமையை உணர்ச்சி வசப்பட்ட எண்ணங்களை தவறான செய்கைகளை எனக்கு குரு காணிக்கையாக இன்றிலிருந்து தந்துவிட வேண்டுகிறேன்”.

-அருட்தந்தை

0

 

33e12d02-a146-4c93-9831-0e292347c14c-large

நான் உடல் என்று குறுகி நிற்பதா? நான் மனம் என்று விரிந்து நிற்பதா? நான் உயிர் (ஆன்மா) என்று உயர்ந்து நிற்பதா? நான் பிரம்மம் என்று உணர்ந்து, முழுதுணர்ந்து நிற்பதா? குறுகி நின்றால் விரிவு இல்லை. விரிந்து நின்றால் குறுக்கமும் விரிவும் மட்டும் தான் உண்டு, உயர்வு இல்லை. உயர்ந்து நின்றால் விரிவும் உயர்வும் மட்டுந்தான் உண்டு; உணர்வு, முழுதுணர்வு இல்லை. உணர்ந்து நின்றால் இவை அனைத்தும் உண்டு. உடல் தோற்றமாக இருக்கிறது. உயிர் ஆற்றலாக இருக்கிறது. மனம் உணர்வாக இருக்கிறது. மனம் தான் நான் எனில் மனம் என்ற ஒன்று தனியாக இல்லையே! உயிர்தானே மனம் என மறுபெயர் பெற்றிருக்கிறது. உயிரோ அணுக்கூட்டம். அணுவோ பிரம்மத்தின் இயக்க நிலை. எனவே, நான் பிரம்மம் என்பது தெளிவாகிறது. நான் என்ற ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். இறைநிலை உணர்ந்த தெளிவில்தான் ஆசை ஒழுங்குறும். எது எல்லாவற்றிற்கும் பெரியதோ, எதை விடப் பெரிது வேறொன்றும் இல்லையோ, அதுவே நானாக இருக்கும் போது அந்நிலை உணர்ந்த தெளிவில் தான் இருக்கும் போது எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று அவா எழ இடம் எது? என்னை உடலளவில் குறுக்கிக் கொண்டிருந்தபோது எதெதனோடோ என்னை ஒப்பிட்டுக் கொண்டேன். அப்போது நான் பெரியவன், நான் வல்லவன், நான் செல்வன், நான் அழகன் என்றெல்லாம் தருக்கு வந்தது. ஒப்புவமையில்லாத ஒரு பெரிய பொருளாக நானே இருக்கும் நிலையை உணர்ந்து கொண்டு விட்ட போது எதனோடு என்னை ஒப்பிட்டுத் தருக்குவது? ஆணவம் எழக் காரணமே இல்லாமலல்லவா போய் விடுகிறது. நானே பிரம்மம் ஆக இருக்கிறேன், பிரம்மம் எல்லாமாக இருக்கிறது என்னும்போது, எல்லாமே நானாக இருக்கும் நிலையையும், நானே எல்லாமாக இருக்கும் நிலையையும் நான் உணர்ந்து மறவாமல் இருக்கும் போது, எதன் மீது பற்று வைப்பது? என்னுடையது என்ற பற்று எழ முகாந்திரமே இல்லையே! நான் இன்னும் அகங்காரமும் எனது என்னும் மமகாரமும் ஒருங்கே ஒழியும் இடம் நான் யார்? நான் பிரம்மம் என்ற தெளிவுதான்.

— யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

0

 

index_03

மனவளக் கலையில் காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி அளிக்கப்படுகிறது. விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி ஆகும் அது. நாம் உண்ணும் உணவு.
1. ரசம்
2. ரத்தம்
3. சதை
4. கொழுப்பு 5. எலும்பு
6. மஜ்ஜை மற்றும்
7. சுக்கிலம்

என்ற ஏழு தாதுக்களாக முறையே ஒன்றிலிருந்து மற்றொன்றாக இறையாற்றலால் மாற்றப்படுகின்றன. இந்த உடலியக்க விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தனையாளர்களுக்கும் மருத்துவ விஞ்ஞானிகட்கும் நன்கு தெரியும். இவற்றில் சுக்கிலம் (விந்து-நாதம்) எனும் ‘சீவ இன அனைத்தடக்கப் பொருள்’ தான் மனித உடலினது தோற்றம் தன்மை வளர்ச்சி இயக்கம் விளைவுகள் அனைத்துக்கும் அடிப்படை ஆற்றலான மிக மதிப்புடைய பொருளாகும்.

உயிரினங்களின் பிறப்பு இறப்பு இரண்டு நிகழ்ச்சிகட்கும் வித்து எனும் சீவசக்தியே காரணம் ஆகும். ஒரு விதையில் ஒரு முழு மரம் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதைப் போலவே விந்துநாதக் குழம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மனித வடிவமே சுருங்கி இருக்கிறது. மேலும் பரிணாமத் தொடராக வரும் செயல்கள் எண்ணம் இவற்றின் அலைகளைச் சுருக்கிப் பதிவாக வைத்திருக்கும் கருமையத்ததைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தெய்வீகத் திரவமும் வித்துவே (Sexual vital fluid) விந்து நாதத் திரவமே ஆகும்.

இத்தகைய மதிப்பு வாய்ந்த வாழ்க்கை நலநிதியான விந்துநாதத் திரவங்களை மனிதவள மதிப்பறியாமல் மக்களில் பெரும்பாலோர் வீணாக்கியும் கெடுத்தும் விடுகிறார்கள். இந்தக் குறைபாடு மனித வளத்தை மிகவும் தாக்கிச் சீரழிக்கின்றது. இதனால் தான் தனிமனிதன் குடும்பம் சமுதாயம் உலகம் என்ற அளவில் மனித இன வாழ்வில் கணிக்க முடியாத எண்ணிக்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் விளைவிக்கின்றன. இந்த உண்மைகளை அறிந்த சித்தர்கள் எனும் மனிதவள விஞ்ஞானிகள் வித்துவைத் தூய்மை செய்து வளப்படுத்தும் பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தப் பயிற்சி தான் காயகற்பம் எனும் மனித வளப் பயிற்சியாகும்.

நீண்ட காலமாக இந்தக் காயகற்ப பயிற்சியானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எல்லாச் சித்தர்களுமே அவரவர்கள் எழுதிய நூல்களில் இந்தப் பயிற்சியைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதி உள்ளார்கள். எனினும் இதனைப் பயின்று பயன் பெற்றவர்கள் நேர்முகமாகக் கற்றுக் கொடுத்தால் அல்லாது எவருக்கும் எழுத்தின் மூலம் இந்தப் பயிற்சியினை விளங்கிக் கொள்ளமுடியாது.

உதாரணமாக

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினா லிருந்தியே கபாலமேற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவார். மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த அம்மைபாதம் ஐயன்பாதம் உண்மையே!

காயகற்ப பயிற்சியைப் பற்றி சித்தர்கள் எழுதி உள்ள பாடல்களில் இது ஒன்று. இது சுத்த தமிழ்தான் என்றாலும் இதனைப் படித்து விட்டுக் காயகற்பப் பயிற்சியை ஒருவர் தெரிந்து பழகமுடியாது. எனவே குரு என்னும் ஒரு நபரிடமிருந்து நேர்முறைப் பயிற்சி தான் தேவையாகின்றது. இந்தக் காயகற்ப பயிற்சி காலத்தால் பல பிரிவுகளாக்கப்பட்டுத் தூரக் கிழக்கு நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன.

சித்த மருத்துவத் துறையில் எனக்கிருக்கும் ஆழ்ந்த பற்றுதலால் சித்தர்கள் அருளியுள்ள பல நூல்களையும் ஆராய்ந்ததோடு எனது அருள் தொண்டு பயணத்தின் போது நான் சந்தித்த பல கீழ்நாட்டு உடற்பயிற்சி ஆசிரியர்கள் மூலம்திரட்டிய பல பயிற்சி முறைகளையும் ஒன்று இணைத்து ‘மனவளக் கலைக் காயகற்பப் பயிற்சி’ என்ற பெயரில் போதித்து வருகிறேன். இப்பயிற்சியை இதுவரை சுமார் இரண்டு லட்சம் பேருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.

இந்த மனவளக்கலைக் காயகற்பப் பயிற்சியில் எனது இருபது ஆண்டுகால செயல்முறை அனுபவங்களும் இணைந்துள்ளன. இந்தப் பயிற்சியை மூன்று மணி நேரத்தில் ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். மனவளக் கலை மன்றங்களில் உறுப்பினராகி வாழ்க்கைவள விஞ்ஞானம் பயில்வேலார்களுக்கு இந்தப் பயிற்சியும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது. முறை தவறிய வழிகளில் விந்துவை நாசப்படுத்தி கொண்டு படிப்பில் விருப்பமில்லாமலும் நினைவாற்றல் குறைந்து வாழ்வில் சோர்வும் ஏமாற்றமும் காண்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இது ஒர் உயர்ந்த சாதனைவழி. ஆண் பெண் இருபாலரும் வயது பதினான்கு பதினைந்துக்கு மேல் காயகற்பப் பயிற்சியைக் கற்றுப் பயனடையலாம்.

திருமணம் வேண்டாம் என்று பொதுநல ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அரிய காயகற்பக் கலை நல்லதோர் தோழனாகப் பயன்படும்.
1.

ஆயகலை கள்மொத்தம் கணக்கெடுத்தோர்
அறுபத்தி நாலுஎன்றார் அனைத்தும் கற்றும்
காயகற்ப மெனும்கலையைக் கற்கா விட்டால்
கற்றதெல்லாம் மண்புக்கும் உடல்வி ழுந்தால்
மாயமெனும் காந்தம்உயிர் வித்து மூன்றில்
மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கி வாழ்ந்தால்
தீயவினை கள்கழிய உலகுக் கென்றும்
தெளிவான அருள்ஒளியாய் நிலைக்கும் ஆன்மா

2.

கறைபோக்கி வித்ததனை உறையச் செய்யும்.
காயகற்பப் பயிற்சியினால் உளநோய் நீங்கும்
நிறைமனமும் ஈகையோடு பொறுமை கற்பு
நேர்நிறையும் மன்னிப்பும் இயல்பாய் ஓங்கும்
இறையுணர்வு விழிப்புநிலை அறிவுக் கூர்மை
இனியசொல் எண்ணத்தின் உறுதி மேன்மை
மறைபொருளாம் மனம் உயிர் மெய் யுணர்வு கிட்டும்.
மாதவமாய்ப் பிறப்பிறப்புத் தொடர் அறுக்கும்!

காயகல்பம் உள்ளிட்ட உடல்பயிற்சிகளை நாள்தோறும் ஒழுங்காகச் செய்துவந்தால் நோயின்றி வாழலாம். உடலில் உள்ள செல்கள் அனைத்திலும் உள்ள துருவ அமைப்பு சீராகும். மரபு வழியாக வந்த நோய்களைக் கூட சில மாதங்களில் போக்கி நலமடையலாம்.

சுருங்கச் சொன்னால் மனிதகுல வாழ்வில் உள்ள அனைத்துக் குழப்பங்களுக்கும் நீங்கி அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்வு அமையும்.
காயகற்பப் பயிற்சி பயன்கள்

1. உடல் நலம் சீரடையும்; ஆஸ்த்மா, சர்க்கரைவியாதி, குடல்புண், மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக நீங்கும் / மட்டுப்படும்.
2. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும்.
3. முதுமையைத் தள்ளிப்போடவும், முதுமையிலும் இளமை காத்து இனிய வாழ்வு வாழவும் வழி கோலும்.
4. பயனுள்ள நீள் ஆயுள் வாழ ஏதுவாகும்.
5. மாணவர்ப் பருவத்தில் நினைவுக் கூர்மை, ஓழுக்கம், கடமையுணர்வு ஒங்கும்.
6. தம்பதியரிடையே இணக்கமான இனிய உறவு அமையும்.
7.மனித வாழ்வில் ஆன்மீக உணர்வு மேலோங்கி வளர உதவும்.

இப்பயிற்சியை 14 வயதிற்கு மேல் ஆண் / பெண் இரு பாலரும் (எல்லா மதத்தினரும்) கற்று இன்புறலாம்.

0 COMMENTS

LABELS: பயிற்சிகள்

அகத்தாய்வுப் பயிற்சிகள்

தவத்தால் மனஅமைதியும், இறைநிலையே தானுமாகவும், தன்னுடன் வாழும் மனிதர்களாகவும் பிற உயிரினங்களாகவும் சடப்பொருட்களாகவும் இருப்பதை உணர்ந்து தெளிந்த நிலை உண்டாகிறது. யாரொருவருக்கும் துன்பம் செய்யாமலும், துன்பப்படுபவர்களுக்கு இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற அன்பும், கருணையும் உள்ளத்தில் உருவாகிறது.

தவத்தின் பயனால் இந்த விளக்கங்களை மனிதன் பெற்றாலும், விளங்கிய வழி வாழ முடியாமல் தத்தளிக்கின்றான். இதற்குக் காரணம் பலப்பல பிறவித் தொடர்களாக மனிதன் உணர்ச்சிவய நிலையிலிருந்து புலன் வழி பெற்ற பழக்கப்பதிவுகளே ஆகும். இப்பழக்கப் பதிவுகளிலிருந்து தன்னை விடுபடுத்திக் கொண்டு விளக்க வழியில் தான் உணர்ந்தவாறு தனக்கும் பிறருக்கும் நன்மையே செய்து வாழும் நிலை வேண்டுமென்றால், அதற்கும் முறையான பயிற்சி தேவைப்படுகிறது.

தன்னிடம் உள்ள குறைகளை போக்கிக் கொண்டு, பிறருக்கும் நன்மையே செய்யும் அறவழி வாழ தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்ட பயிற்சி முறைகளே அகத்தாய்வு பயிற்சிகளாகும்.

அகத்தாய்வு பயிற்சிகளில்

எண்ணம் ஆராய்தல்
ஆசை சீரமைத்தல்
சினம் தவிர்த்தல்
கவலை ஒழித்தல்
நான் யார்?
என்ற தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிகளை கற்றுக் கொண்டு அதன்படி வாழும்பொழுது குணநலப்பேறு என்ற சிறந்த பண்பினை ஒவ்வொருவரும் அடைய முடியும்.

நம்மிடம் உள்ள தீய வினைப் பதிவுகள் காரணமாக ஒவ்வொரு மனிதனிடமும் ஆறு வேண்டாத குணங்கள் உள்ளன. அவை பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் அதாவது காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகும்.

அகத்தாய்வு பயிற்சிகள் மூலம் :

பேராசையை – நிறைமனமாகவும்
சினத்தை – சகிப்புத்தன்மையாகவும்
கடும் பற்றினை – ஈகையாகவும்
முறையற்ற பால் கவர்ச்சியை – கற்பாகவும்
உயர்வு தாழ்வு மனப்பான்மையை – சமநோக்காகவும்
வஞ்சத்தை – மன்னிப்பு ஆகவும்

மாற்றி மனிதநேயம் மலர்ந்து எல்லோரோடும் இணக்கமாக வாழலாம்.

சமுதாயத்திலே நாம் வாழும்போது பிறருடன் தொடர்பு கொண்டுதான் வாழ்ந்தாக வேண்டியுள்ளது. அவர்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு இனிமையாக அமையும் அளவில்தான் வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும் நிலவும். அந்த இனிமையான உறவு அமைய பிறரை வாழ்த்துகின்ற பழக்கம் அவசியம். அந்த வகையில்தான் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு தாரக மந்திரமாக வாழ்க வளமுடன் என்ற வாழ்த்தும் முறையை தந்துள்ளார்கள்.

அமைதியான மனநிலையில் பிறரை வாழ்த்தும் போது எல்லோரோடும் இணக்கமான உறவு ஏற்படும். கருத்து வேறுபாடு உள்ளவர்கள் கூட மனமாற்றம் பெற்று நண்பர்களாகி விடுவார்கள்.
அகத்தாய்வு முதல்நிலை
அகத்தாய்வு இரண்டாம்நிலை
அகத்தாய்வு மூன்றாம்நிலை
அகத்தாய்வு நான்காம்நிலை

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

1

p93a

இறைவனின் இன்னொரு பக்கம்தான் மனிதன் அல்லது மனிதனின் மருபக்கமாக இருக்கும் இறைவனைதெளிவுபடுத்துவதுதான்’வேதாத்திரியம்’
தவம் செய்வதற்கு பிரம்மச்சரியம் அவசியம் எனபதை மாற்றி ஒருவனுக்கு உடலும் உயிரும் இருந்தால் மட்டும் போதும் என்பதை போதிப்பது வேதாத்திரியம்பக்தி எதையும் எடைபோடாது ஆனால் ஞானம் எதையும் எடைபோடாமல் விடாதுஎந்த ஒன்று எல்லாவற்றிலுமே இருக்கிறதோ அந்த ஒன்றில் எல்லாமே உள்ளது. அதுதான் இறைநிலை (இறைவன்) என்ற தெளிவு
எளிய முறை தியானம் என்பது தனக்குள்ளேயே தான் இறங்குவது. தவம் எனபது தன்னை தனக்கு அறிமுகப்படுத்துவது. புறத்தே அலையும் மனத்தை அகத்தே உள்ள காந்த அலைமீது குவித்து நிறுத்தி நிலைபெறச்செய்வது . இதுவே எளிய முறை குண்டலினியோகம்.
அறிவின் மூலத்தோடு இணைவது தவம். அறிவின் வழிநடந்து கொளவது அறம். இறை உணர்வும் அறநெறியுமே மனிதனை மேம்படுத்தும்.

வாழ்க வளமுடன்

0

ஞான நெறி. புலன்களுக்கு எட்டாமல் நிற்கும் அப்பேராதார நிலையைத் தானே எய்தி அனுபவமாகப் பெறுவது, இது அகநோக்குப் பயிற்சியால் கிட்டக்கூடிய பேறு. ஆன்மா புலன்கள் மூலம் உலகைத் தொடரும் போது மனமாக இருக்கின்றது. மனம் அகநோக்குப் பயிற்சியால் உயிரில் ஒடுங்கும்போது மனமே அறிவாகி ஆன்ம உணர்வை எய்துகிறது. அறிவைக் கொண்டு ஆன்மாவின் மூலநிலை உணரும்போது ஆன்மாவே நிறை நிலை எய்துகின்றது. ஆன்மாவே மெய்ப்பொருளாக அக உணர்வு பெறுகின்றது. இந்த அனுபவங்கள் அகத்தவத்தால் மாத்திரம் கிட்டும். இத்தவத்தைப் பயில ஆசான் வேண்டும். பக்தி நெறிக்கு நூல்களே போதும். ஞானநெறிக்கு ஆசானின் நேர்முகத் தொடர்பு வேண்டும். இந்த இரண்டு வழிகளில் அவரவர் அறிவுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ற ஒன்றைப் பின்பற்றலாம். பக்தி நெறியில் முழு அமைதி கிடைக்காவிட்டால் அப்போது ஞான நெறிதான் தகுதியானது. பக்தி நெறியில் மனிதன் தெய்வத்தை நம்புகிறான். ஞானநெறியில் தெய்வத்தை உணர்கிறான். உள்ளுருக்கத்தோடு இவற்றில் எந்த நெறியைப் பின்பற்றினாலும் மனிதனின் தன்முனைப்புத் திரை நீங்கி விடும். இந்தத் திரையை நீக்கிக் கொண்டு விழிப்போடு கடமையாற்றினால் வாழ்வு நிறைவை அளிக்கும். மகிழ்ச்சி ஓங்கும். மனிதன் அருட்பேறு பெற்ற இன்பத்தில் அமைதி பெறுவான்.

— யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

0

ஆன்மப் பேரொளியை மறைத்திருக்கும் தன்முனைப்புத் திரை நீக்கப்பட்டு விட்டால், மனிதனே தெய்வம். ஆன்ம உணர்வைப் பெற்று விடுகிறான்; ஆன்மாவுக்கும் மூலப் பேராற்றலான தெய்வ உணர்வையும் பெற்று விடுகிறான்.

பேரியக்க மண்டலத்தில் அவன் காணும் எல்லாத் தோற்றங்களும், நிகழ்ச்சிகளும், விளைவுகளும் தெய்வீக ஒழுங்கு அமைப்பின் திருவிளையாடலாகவே காண்கிறான். அவன் உணர்ச்சி வயப்படுவது இல்லை. பொறுமைக் கடலாகிறான். அவனிடம் பழிச்செயல்கள் எழுவது இல்லை. அறக்கடலாகத் திகழ்கிறான். அவன் அறிவிலே மயக்கமில்லை. மெய் விளக்கத்தால் மேன்மை பெற்ற பேரொளியாகத் திகழ்கிறான். அவன் வாழ்வில் ஒழுக்கம் இயல்பாக அமைகிறது. அவ்வொழுக்கத்தைப் பின்பற்றி எண்ணிறந்த மக்கள் தங்களைத் தூய்மை செய்து கொள்கின்றனர்; மேன்மை பெற்று வாழ்கின்றனர்.

இந்தத் தன்முனைப்புத் திரையை அகற்றுவது எப்படி? அது அவ்வளவு எளிதானதா? அத்தகைய நற்பேறு தனக்கும் கிடைக்குமா? இவ்வாறான ஐயங்கள் பலருக்கு எழுவது இயல்பு. மனிதன் தான் தனது தன்முனைப்புத் திரையை விலக்கிக் கொள்ள வேண்டும். அதற்குத் தேவையானது அக்கறையும், முயற்சியுமே. சிந்திக்கும் ஆற்றல் பெற்ற எல்லோருக்கும் இது கைவரக்கூடியது.

— யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

எண்ணம்

எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு விதத் தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மெளன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள். உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் எண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால், அப்போதுதான், அது தானே சிறுகக் சிறுக அமைதி பெறும். எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெருநிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அதுதான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்று விட்டால் நீ என்பது தனித்து ஏது? பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால், உடலுக்கும், அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்றுப் பெருக ஆரம்பித்து விடும்.

— யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

0

இறைநிலை எங்குமே உள்ளது. அதை உணர்ந்தால், அது செய்யக் கூடிய காரியமெல்லாம் நீதியானது என விளங்கும். எந்த இடத்திலும் தவறு இருக்கவே முடியாது. இதை நல்ல முறையிலே தெரிந்து கொண்டால், ‘ஐயோ! நான் கடவுளுக்கு ஐந்து தேங்காய் உடைத்தேனே! இன்னும் என் குழந்தைகள் சரியாகவில்லையே’ என்று வருந்த மாட்டோம். தேங்காய் உடைக்கும் முன், நாம் செய்த தவறுகள் எத்தனை? அதெல்லாம் அல்லவா இப்போது துன்ப விளைவாக வருகின்றன! அதனால், ‘அந்த இறைவனுக்குக் கண்ணில்லையே!’ என்று சொல்லும் அளவுக்கு போகக் கூடாது. இறைவன் செய்வதில் தவறு ஏற்படாது என்ற உண்மையை உணர்ந்து உணர்ந்து, இறைவனுடைய செயல் எல்லா இடத்திலும் நீதியாகவே இருப்பதைக் கண்டு கொள்ளுங்கள். அந்த இடத்திலே பிறப்பது தான் அமைதி. இன்றைக்கு நம்மிடம் ஒரு பொருள் இருக்கிறது. அதைக் கொடுத்தவன் இறைவன். உடல்நலம், அறிவு, செல்வம், பதவி இவ்வளவையும் கொடுத்தவன் இறைவன். ஆனால் ‘இன்னும் எனக்கு வரவேண்டிய பதவி உயர்வு வரவில்லையே! எப்போதோ வர வேண்டுமே! இன்னும் வரவில்லையே!’ என்று குறைபடுகிறோம். அதனால் என்ன ஆனது? நமக்கு இருக்கின்ற ஆனந்தம், இன்பம் எல்லாவற்றையும் விட்டுவிடுகிறோம். கற்பனையினால் எல்லைகட்டி ஒரு வரையறை செய்து கொள்கிறோம். இருந்த இன்பமும் போய் விடுகிறது. இவ்வளவையும் கொடுத்தவன், இறைவனே தான். எல்லை கட்டிய மனநிலையில் நாம் ‘இப்படித்தான் இருக்க வேண்டும். அப்படித்தான் இருக்க வேண்டும். இதுதான் நல்ல்து, அது கெட்டது’ என்று நினைக்கிறோம். இது உண்மையில் நல்லதா? நல்லதாகவும் இருக்கலாம். கெட்டதாகவும் இருக்கலாம். ஆனால், கற்பனையில் நாம் வரையறை செய்து கொள்கிறோம். கற்பனையான நிலையில் இருக்கும் வரையில், நாம் இதுவரை பெற்றதைப் பாராட்டாமல், அதை அனுபவிக்கத் தெரியாமல், ‘அந்தப் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும், இந்தப் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று மனதை மறுபுறம் திருப்பிவிட்டுக் கொள்கிறோம். இவ்வளவையும் அனுபவிப்பது யார்? இதுவரைக்கும் இவ்வளவையும் கொடுத்தானே இறைவன் அதை மறந்து விடுகிறோம்.

— யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி