Home Uncategorized இரண்டொழுக்கப் பண்பாடு

இரண்டொழுக்கப் பண்பாடு

98
0
SHARE

அருட்காப்பு

அருட் பேராற்றல் இரவும் பகலும், எல்லா நேரங்கலிலும், எல்லா இடங்கலிலும், எல்லா தொழில்களிலும், உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமையுமாக!

சங்கல்பம்

அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்வேன்!

குரு வணக்கம்

அண்டமதில் உருவெடுத்து அறிவைப் பெற்று அவ்வறிவு ஒன்றுமுதல் ஆறதாகிக் கொண்டமேலாம் இவ்வுருவில் குறிப்பில்லாமல் கோடான கோடியெண்ணி அனுபவித்துக் கண்டபலன் எனையறிய நினைந்தேனப்போ கனல்மூட்டிக் கருவெழுப்பிக் கருத்துணர்த்தி குண்டலினியெனும் என் மெய்யுணர் வெழுப்பிக் குறித்து எனையறிவித்த குருவே அன்பே.

இரண்டொழுக்கப் பண்பாடு

1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.

2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

ஒழுக்கம்

தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, உயிர் உணர்ச்சிக்கோ துன்பம் விளைவிக்காத எண்ணம், சொல், செயல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here